Close
ஜனவரி 27, 2025 7:37 மணி

குடியரசு தின விழா : தேசியக்கொடியை பறக்கவிட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்..!

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்தியத் திருநாட்டின் 76 வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இக்குடியரசு தின விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

மேலும், இவ்விழாவில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள், எல்லைப்போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கதர் ஆடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.

மேலும், இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பாராட்டு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகச் சிறப்பாக தன்னார்வலர்களில் சிறப்பாக சமூக சேவை புரிந்தமைக்காக மக்கள் நண்பர்கள் குழு (FRIENDS OF PEOPLE) ஒருங்கிணைப்பாளர் A.A.ஆறுமுகம், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சமூக சேவை புரிந்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

அதனைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ரசித்து பார்த்தனர்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் மந்தாகினி , அரசு துறை அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி

திருவண்ணாமலை மாநகராட்சியில் இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top