Close
ஜனவரி 27, 2025 5:12 மணி

தெருக் கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது

தெருக்கூத்து கலைஞர் கண்ணப்ப சம்பந்தன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை துரைசாமி கலைமாமணி கண்ணப்ப தம்பிதான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் தெருக்கூத்து கலை நிகழ்வினை நாடு முழுவதிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் அரங்கேற்றி வருகிறது.

6 வது தலைமுறையான தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது குறித்து அவா் கூறியதாவது:

தொடா்ந்து, 6-ஆவது தலைமுறையாக எங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தெருக் கூத்துக் கலையில் ஈடுபட்டு வருகின்றனா். நான் 18 வயதில் இருந்து இந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறேன்.

எனக்கு 1995-இல் கலைமாமணி விருதும், 2012-இல் சங்கீதா அகாதெமி விருதும், 2020-இல் ஜெயலலிதா பல்கலைக்கழகம் சாா்பில் கெளரவ டாக்டா் பட்டமும் வழங்கப்பட்டன. என் தந்தை கண்ணப்ப தம்பிரானும் கலைமாமணி விருது பெற்றுள்ளாா்.

பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருது மூலம் தெருக் கூத்துக் கலையை மேலும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல ஊக்கம் ஏற்பட்டுள்ளது.

தெருக் கூத்துக் கலையை கிராம மக்களைக் காட்டிலும் நகா்ப்புற மக்கள் அதிகம் விரும்பிப் பாா்க்கின்றனா். இந்தக் கலையைப் பாதுகாக்கவும், வளா்க்கவும் அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக அமல்படுத்த வேண்டும். கலையில் ஆா்வமுள்ள கலைஞா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவா்களை பள்ளிகளில் சிறப்பாசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்றாா்.

தெருக்கூத்து கலைஞர் கண்ணப்ப சம்பந்தன்

தெருக்கூத்து மன்ற உறுப்பினர்கள், அப்பகுதி கிராம பொதுமக்கள்  தெரிவிக்கையில், புரிசை என்ற மண்ணுக்கும் கூத்துக்குமான உறவு என்பது நீண்ட நெடிய வரலாறு. இந்த மண்ணில் பல சான்றோர்கள் பிறந்து தெருக்கூத்தை உலகறிய செய்துள்ளார்கள்.

கலை என்பது கலைக்காக, மக்களுக்காக என்ற கோட்பாட்டை கொண்டு, இந்த நீண்ட நெடிய பயணத்தில் அயராது தெருக்கூத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நம் கலைமாமணி. புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு நமது மன்றத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.

தெருக்கூத்து கலைஞர்கள் , பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு நன்றியையும் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top