Close
ஜனவரி 29, 2025 8:02 மணி

குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடைகள் மீது வழக்கு..!

வழக்கு -கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 51 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து உத்தரவின்படி, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான ஜன. 26, குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத கøடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, தொழிலாளர்களுக்குக் கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா, அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது, 3 தினங்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவம் மூலம் முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. 22 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 17 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும், 39 பேக்கரி மற்றும் ஓட்டல்களில் ஆய்வு செய்ததில் 33 நிறுவனங்களிலும்,

4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 1 நிறுவனத்திலும் என மொத்தம் 65 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 51 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், ஏற்கனவே அனுமதி பெறாமலும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.

அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை உதவி கமிஷனர் முத்து தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top