Close
ஜனவரி 31, 2025 12:11 காலை

சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல்:

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவலச மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ஜெயந்தி சந்திரசேகரன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் சேந்தமங்கலம் உட் கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் அனைத்து திறன்மிகு உதவியாளர்கள், சாலைப் பணியாளர்கள், வாகன டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும்,

முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இலவச கண்பரிசோதனை முகாமில் பணியாளர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பிரனேஷ் மற்றும் இளநிலைப் பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top