Close
ஜனவரி 30, 2025 8:38 காலை

நெசவு செய்ததற்கான கூலியை பணமாக வழங்கக் கோரி நெசவாளர்கள் மீண்டும் முற்றுகை போராட்டம்..

காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கான கூலியை நேரடியாக பணமாக வழங்க வலி யுறுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்கள் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர்
காஞ்சிபுரத்தில் ஏராளமான பட்டு விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் ஏராளமான நெசவாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து நெசவு நெய்து, அதை கூட்டுறவுச் சங்கங்களில் அளித்து அதற்கான கூலியைக் பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கைத்தறித் துறை துணை இயக்குநர் நெசவாளர்களுக்கான கூலி பணமாக வழங்கப்படாமல் நெசவாளர்கள் வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை மூலமே வரவு வைக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த சுற்றறிக்கைக்கு நெசவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதைக் கண்டித்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கூட்டுறவு பட்டு விற்பனை சங்க அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காஞ்சிபுரம் கைத்தறித் துறை துணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெசவாளர்களுக்கான கூலியை பணமாக தான் வழங்க வேண்டும், வங்கி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடாது என்ற உத்தரவைக் கண்டித்து பட்டுக் கைத்தறி நெசவாளர்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நெசவாளர்கள் நெசவு செய்த கூலியை பணமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் காமாட்சி அம்மன் பட்டுக்கோட்டை சங்க அலுவலகம் முன்பு ஈடுபட்டனர்.

இதில் காஞ்சிபுரம் கே.எஸ்.பார்த்த சாரதி கைத்தறி சங்க தலைவர் ஜெ.கமலநாதன் தலைமை தாங்கினார். சிஐடியூ சங்க மாவட்ட செயலாளர் ஜீவா மற்றும் நிர்வாகிகள் பி பி ஸ்ரீனிவாஸ் பா. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி சங்க நெசவாளர்கள் கூறுகையில், இந்த உத்தரவு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் என்பதால், அதை திரும்பப் பெற வேண்டும். ஆகவே கைத்தறித்துறை இந்த உத்தரவை திரும்பப் பெற்று மறுபரிசீலனை செய்து பழைய முறையிலேயே நெசவாளர்கள் கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top