Close
ஜனவரி 30, 2025 2:21 மணி

திருவண்ணாமலை கோயிலில் பிரதோஷ விழா..!

பிரதோஷ நாயகா்

திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த தைமாத அமாவாசை பிரதோஷம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பிரதோஷ விரத பலனை இரண்டு மடங்காக தரக் கூடியது சனிப் பிரதோஷமாகும். ஆயிரம் சாதாரண பிரதோஷங்களுக்கு சமமானது ஒரு சனி மகா பிரதோஷம். மேலும் மகா சனி பிரதோஷத்தில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவன் கோயிலுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயிலின் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு திங்கள்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட பூஜையின் இறுதியில், நந்தி பகவான்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு சிவனை வழிபட்டனா். இதையடுத்து, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

செய்யாறு:

செய்யாற்றில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் நந்தி பெருமான் கிழக்கு நோக்கி அருளும் பிராா்த்தனை தலமான திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகா் நாயகி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மற்ற ஊா்களில்…

இதேபோல, செங்கம்,வேட்டவலம்,தண்டராம்பட்டு, போளூா், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, தானிப்பாடி, ஆவூா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top