Close
ஜனவரி 31, 2025 2:41 காலை

மனிதநேய வார விழா : துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!

பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான மனிதநேய வார விழா நடைபெற்றது.

மனிதநேய வார விழாவினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கூறுகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச வீட்டு மனை பட்டா, கட்டணமில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டி,கல்வி உதவித்தொகை, பழங்குடியினர் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர்க்கு சுய தொழில் செய்ய மானியத்துடன் கூடிய உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான மனிதநேய வார விழா 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஏழு நாட்கள் நடைபெறும் மனிதநேய வார விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நாட்டியம், கட்டுரை போட்டி ,நாட்டு நலப்பணி திட்டம் மூலமாக கல்லூரி மாணவ மாணவியர்களுடன் அவர்தம் குடும்பத்துடன் தேநீர் அருந்தி மன மகிழ் நிகழ்ச்சி அனைத்து மத தலைவர்களையும் ஆதிதிராவிடர் சான்றோர்களையும் ஒன்று கூட்டி நல்லிணக்க கூட்டங்கள்,

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தொழில் மையம் மூலமாக சமுதாயத்தில் முன்னேறியவர்களைக் கொண்டு சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனை கூட்டம், தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

மேலும் நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் ஊக்கத்தொகை மற்றும் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மனிதநேய வார விழாவை துவக்கி வைத்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பயனாளிகளுக்குகட்டணமில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி, மாணவ மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top