Close
ஏப்ரல் 16, 2025 3:16 காலை

பசுமலை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

போக்குவரத்து விதிமுறைகளை விளக்கும் காவல்துறை அதிகாரிகள்

மதுரை:

மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப்பள்ளியில், தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழிகாட்டுதலில் பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

தெற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகள் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு கூறப்பட்டது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ரிச்சர்ட் பி ராஜன் வரவேற்புரை வழங்கினார்.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் சாலை பாதுகாப்புவிதிமுறைகள், சிக்னல் குறித்த விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள். சாலியல் பாதுகாப்பாக பயணம் செய்வதன் அவசியம் குறித்தும் கூறினார்கள்.

சாலை பாதுகாப்பு மன்றச் செயலாளர் தி.மோசஸ்ராஜன் நன்றி கூறினார். நுகர்வோர் மன்றச் செயலாளர் பிரகாஷ், மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ராபின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top