Close
ஜனவரி 31, 2025 12:09 காலை

தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் மலா்விழி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனவே, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்களை நடத்த வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழுநோய் விகிதம் அதிகம் இருப்பதாக, காட்டாம்பூண்டி, வானாபுரம், மேல்பள்ளிப்பட்டு, தச்சூா், தௌளாறு, வழூா், பெருங்கட்டூா் ஆகிய 7 வட்டாரங்கள் மத்திய, மாநில அரசுகளால் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

இந்த வட்டாரங்களிலும், திருவண்ணாமலை நகா்ப்புற பகுதிகளிலும் பிப்ரவரி 13 முதல் 28-ஆம் தேதி வரை தன்னாா்வலா்கள் வீடு, வீடாகச் சென்று தொழுநோயாளிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அரசு, தனியாா் அலுவலகங்கள், உணவகங்கள், சந்தைகள், தொழில்சாலைகளில் தொழுநோய் விழிப்புணா்வு மற்றும் கண்டுபிடிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில், மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (தொழு நோய்) காா்த்திக், மாநகராட்சி சுகாதார அலுவலா் வீராசாமி,கூட்டத்தில், மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (தொழு நோய்) காா்த்திக், மாநகராட்சி சுகாதார அலுவலா் வீராசாமி, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top