Close
ஜனவரி 30, 2025 7:13 காலை

புதிய பயணியர் நிழற்குடை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த சரவணன் எம் எல் ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புது பாளையம் ஒன்றியத்தில் உள்ள முன்னூர்மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசுகையில், பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு வந்த போது என்னிடம் இப்பகுதி மக்கள் எங்கள் பகுதிக்கு புதிய பயணியர் நிழற்குடை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7, புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு இப்போது பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அதன் பின்னர் இப்பகுதி மக்கள் சுலபமான முறையில் புதிய பயணியர் நிழற்குடை மூலம் அமர்ந்து பேருந்தில் ஏறி பயணம் செய்யலாம்.

மேலும் மக்கள் வெப்பம் நேரங்களிலும் மழை நேரங்களிலும் பயணியர் நிழற்குடையில் அமர்ந்து பயணம் செய்வதற்கு சுலபமாக இருக்கும் என்று சரவணன் எம் எல் ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்பாலூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதி இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பங்கேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மக்கள் நல பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், மின்சார துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top