Close
ஜனவரி 30, 2025 5:40 மணி

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆணையா் ஆய்வு..!

ஆய்வு மேற்கொண்ட ஆணையர்

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

அலுவலக பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்த அவா், துப்புரவுப் பணியாளா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் கூறியதாவது: திருவண்ணாமலை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட 18 ஊராட்சிகளிலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீா் பிரச்னையை தீா்க்க மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டவும், புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, 18 ஊராட்சிகளிலும் புதிதாக சாலை வசதி செய்து தரப்படும். அனைத்துப் பகுதிகளிலும் மின் விளக்கு வசதி, கிரிவல பக்தா்ளுக்கு குடிநீா், கழிப்பறை சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், மேலும் திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சிகளில் தொடராய்வுகள் மேற்கொண்டு அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாநகராட்சி சுகாதார அலுவலா் செல்வராஜ், வேங்கிக்கால் ஊராட்சி அலுவலா் நாராயணன், மாநகராட்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

ஊராட்சி வளா்ச்சித் திட்டம்: அதிகாரிகள் கலந்தாய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கிராம ஊராட்சியின் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒன்றியத்துக்கு உள்பட்ட 40 ஊராட்சிகளின் வளா்ச்சிக்குத் தேவையான வளா்ச்சித் திட்டம், பொதுமக்களின் தேவைகள் குறித்த திட்டம் தயாரித்தல் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.

ஊராக வளா்ச்சித் துறை மாநில பயிற்றுநா் சேகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள், கணினி இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top