Close
ஜனவரி 30, 2025 5:33 மணி

இ சேவை மைய உரிமையாளர் கொலை : தனிப்படை அமைத்து விசாரணை..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சி.சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபால், இவா் தனது மகன் ராமகிருஷ்ணன், பேரன் காா்த்திகேயன்  ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

இதில் கார்த்திகேயன் இ சேவை மையம் நடத்தி வருகிறார். மேலும் விவசாயம் மனை வணிகத் தொழிலும் செய்து வருகிறாராம். கடந்த 27ம் தேதி காா்த்திகேயன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் மா்ம நபா்கள் வீடு புகுந்து கார்த்திகேயனை கத்தியால் குத்தி, இரும்புக் கம்பியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் உயிரிழந்தாா்.

அப்பகுதி பொதுமக்கள் கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸாா் வந்து காா்த்திகேயனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணை காவல் கண்காணிப்பாளா் அறிவழகன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் கார்த்திகேயன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க கூடுதல் எஸ்பி சதீஷ்குமார் மேற்பார்வையில் திருவண்ணாமலை காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, சிவசங்கர், கீழ்பென்னத்தூர் காவல் ஆய்வாளர்  லட்சுமி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தனிப்படை போலீசார் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top