Close
ஜனவரி 30, 2025 11:15 மணி

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வேலை: விவரங்கள் உங்களுக்காக

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் கிரிவலம் செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

அருணாசலேசுவரர் கோயிலில் வேலை

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில்  தற்போது, திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கால்நடை பராமரிப்பாளர், காவலர், கூர்க்கா, தட்டச்சர், உள்பட பல்வேறு பதவிகளில் மொத்தம் 109 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம் , சம்பளம்;

தட்டச்சர்; பணியிடம் 1 சம்பளம் ரூ. 18500-58600

கல்வித் தகுதி; பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை,  கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றுகள் படிப்பில் தேர்ச்சி அல்லது இதற்கு இணையான அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர்  ; 70 பணியிடம் ஆண்கள் 60, பெண்கள் 10 சம்பளம் ரூ. 15900-50400, தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

கூர்க்கா ; 2 பணியிடம் சம்பளம் ரூ. 15900-50400  தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

கால்நடை பராமரிப்பாளர் ; 1 பணியிடம் சம்பளம் ரூ.10000-31500   தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

ஏவலால் பண்ணை சாகுபடி ;  2 பணியிடம்,  சம்பளம் ரூ.10000-31500  தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

உப கோயில் பெருக்குபவர் ;  2 பணியிடம் சம்பளம் ரூ.10000-31500   தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

உப கோயில் காவலர் ;  2 பணியிடம்  சம்பளம்   ரூ.11600-36800   தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

திருமஞ்சனம் ; 3 பணியிடம் சம்பளம் ரூ.11600-36800  தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும், மற்றும் சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலை தொடர்புடைய துறையில் ஓர் ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

முறை ஸ்தானிகம்;  10 பணியிடம் சம்பளம் ரூ. 10000-31500,    தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும், மற்றும் சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலை தொடர்புடைய துறையில் ஓர் ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

ஓடல், தாளம் ; 5 பணியிடம், சம்பளம் ரூ.15,900-50400,    தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு), பிளம்பர், உதவி மின்பணியாளர்

7 பணியிடம், சம்பளம் ரூ. 16,600-65,500  தகுதி மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பட்டப்படிப்பு மற்றும் ஐஐடி முடித்தவர்கள், தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் தேவார ஆசிரியர் சங்கீத இசை ஆசிரியர் ஆகம ஆசிரியர்  4 பணியிடம் சம்பளம் ரூ. 35400-116200,

தகுதி தமிழில் முதுகலை பட்டம், ஆகம பள்ளியில் மூன்று ஆண்டுகள் தேர்ச்சி, இசை ஆசிரியர்  படிப்பில் தேர்ச்சி,சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் நான்காண்டு பாடப்பிரிவில் சான்றுகள் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?:

காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்ப படிவமானது www.hrce.tn.gov.in மற்றும் https://annamalaiyar.hrce.tn.gov.in ஆகிய திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய் 100 செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று பிற்பகல் 05.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் கூடுதல் தகுதிக்கான சான்றுகள் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிற ஆவணங்களின் நகல்களை சுய சான்றோப்பும் செய்து (self attested) இணைக்கப்பட வேண்டும். அசல் சான்றிதழ் அனுப்பக்கூடாது.

விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணமாக கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

இணை ஆணையர் /செயல் அலுவலர்,

 அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்,

திருவண்ணாமலை 606 601.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top