Close
ஜனவரி 31, 2025 9:56 காலை

நாமக்கல் மாநகராட்சி வரி பாக்கி செலுத்துவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: கமிஷனர் எச்சரிக்கை..!

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி.

நாமக்கல் :

நாமக்கல் மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள், உடனடியாக செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி. தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில், இதுவரை 49 சதவீதத் தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.

மீதம் 51 சதவீத வரி மற்றும் வருவாய் இனங்கள் நிலுவையாக உள்ளது. மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் உரிய காலங்களில் வசூல் செய்தால் மட்டுமே மாநகரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர் விநியோகம், திடக்கழிவு பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய முறையில் மேற்கொள்ள இயலும்.

பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம்தான் செலுத்த வேண்டுமென தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்திய சட்டப்படி 2024-2025ஆம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்குரிய தொகையினை முழுவதுமாக 31.10.2024க்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனவே இன்னும் தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும், உடனடியாக நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையங்கள் இயங்கும்.

உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக துண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐப்தி நடவடிக்கை மற்றும் சட்டரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top