முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு – வின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலத்தில் பா.ம.க-வினர் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.குரு – வின் 64-வது பிறந்த நாளை வன்னியர் சங்கத்தினரும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி தென்காசி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றாலத்தில் வன்னியர் சங்க கட்டிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ.குருவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ. குருவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் குலாம், தென்காசி தொகுதி செயலாளர் அரிகரன், தென்காசி தொகுதி தலைவர் சுசி.சுந்தர், மாவட்ட துணை தலைவர் மகாதேவன், கடையநல்லூர் தொகுதி செயலாளர் ராஜேந்திரன், தென்காசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சண்முகசுந்தரம், ஒன்றிய தலைவர்கள் தண்டபாணி, சீவநல்லூர் இசக்கிமுத்து, தென்காசி நகர இளைஞரணி செயலாளர் கெய்சர் அலி, இளைஞர் அணி தலைவர் கார்த்திக் உட்பட கலந்து கொண்டனர் . முடிவில் தென்காசி நகர செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.