Close
பிப்ரவரி 23, 2025 4:10 காலை

அண்ணாவின் 56-வது நினைவு நாள்: நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்,திமுகவை தோற்றிவித்தவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது .

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து நினைவு இல்லத்தில் உள்ள குறிப்பேட்டில் நினைவு நாளான இன்று அவரது பொன் மொழியான கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற வழியில் தவறாது நடப்போம் என்று உறுதி ஏற்போம் என எழுதி கையெழுத்திட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top