Close
ஏப்ரல் 16, 2025 8:48 காலை

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு: மாநகராட்சி ஊழியர் வீட்டில் திடீர் சோதனை

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையில் மாநகராட்சி ஊழியர் கண்ணன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை வார்டுகளை உள்ளடக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இம் மாநகராட்சியில் பிட்டராக காமாட்சி அம்மன் அவன்யூ பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

நகராட்சி காலத்தில் இருந்து பணியில் இருந்து வரும் நிலையில் தற்போது வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் மாநகராட்சி ஊழியர் கண்ணன் சொந்தமான வீடான காமாட்சி அம்மன் அவென்யூ இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் வீட்டில் உள்ள ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு வழங்குதல் என பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் பணம் பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பதிவு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top