சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், சி ஏ டி யு தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு இறுதியில் 30 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தொழிற்சங்கத்தை பதிவு செய்யாத தொழிலாளர் நலத்துறையை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மோகன்ராஜ் சிவனேசன் குணசேகரன் மூன்று பேரை சாம்சங் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.
அனைத்து தொடர்ந்து தற்போது சி ஐ டி யு தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தற்போது சாம்சங் நிறுவனத்தில் பரபரப்பு நிலவி வருகிறது