Close
பிப்ரவரி 23, 2025 10:18 காலை

கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் சேதமான பாலம் : புதிய பாலம் அமைக்கப்படுமா?

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் பாலம் சிதிலமடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பாலம் கட்டி தராததால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதியுறும் அவல நிலை நீடித்து வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேல வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 400க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தின் வழியாக உச்சிகண்ணம்மாள்புரம் என்ற கிராமத்திற்கும், வெள்ளை மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலுல் மாணவர்களின் விடுதிக்கும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு சாக்கடை கால்வாயை சரி செய்யும் பணியின் போது இக்கிராமத்தின் மையப்பகுதியில் சாக்கடை மீது பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பாலம் கட்டிய ஒரே ஆண்டில் பாலம் சிதிலமடைந்து உடைந்த நிலையில், அடுத்தடுத்து வந்த மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பாலத்தை முழுவதுமாக அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் புதிய பாலம் அமைத்து தர கோரி தொடர்ந்து இப்பகுதியில் மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வரும் சூழலில் கடந்த இரு ஆண்டாக புதிய பாலம் அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால், இக்கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தை தவிர்த்து எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.
பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், அவரச தேவைக்கு வரும் ஆம்புலென்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top