நாள்தோறும் நாளிதழ், புத்தகம் வாசிப்பே சிறந்தது என காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நல்லூர் கூட்டரங்கில், காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிமுக உரையாற்றுகையில், இந்நிகழ்ச்சி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதேவேளையில் இதுபோன்ற உரையாடல் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் உயர்பதவி அடைதல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை கேள்வி எழுப்ப அதற்கு மாவட்ட ஆட்சியர் அது குறித்த தகவல்களை கலந்துரையாடினர்.
இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கூறுகையில், நாள்தோறும் நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பு சிறந்த பயனளிக்கும் எனவும் , இது போட்டி தேர்வுகளுக்கு சிறந்த பயனளிக்கும் எனவும் இதன் மூலம் மாணவர்கள் உயர் பதவிகளை எளிதில் அடையலாம் எனவும் தெரிவித்தார்.
கல்வி கற்றபின் அரசு வேலைகள் மட்டுமல்லாது சுய தொழில்கள் புரிந்து பலருக்கு வேலை அளிக்க வேண்டும் எனவும்,
மேலும் தீய பழக்கங்கள் ஈடுபடும் மாணவர்களை குறித்து தெரிவிக்கும் நிலையில் போதை பொருட்களை முற்றிலும் அழிக்க இந்த தகவல்கள் மிக உதவும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர்கள் கல்வித்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற உரையாடல்களில் பங்கேற்பது தங்களது தன்னம்பிக்கையும் அச்சத்தையும் போக்கும் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்