தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டைக்கு அரசு கலைக்கல்லூரி வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
அந்தப் பேருந்தில் சுரண்டை செல்ல வேண்டி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர் அப்போது நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்தில் தொங்காமல் உள்ளே ஏறச் சொல்லி உள்ளார்கள்.
அப்போது மாணவர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து ஊழியர்களை தாக்கி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்று விட்டனர்.
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பேருந்து எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சுரண்டை காவல் துறை உதவி ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்பு கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. இச்சம்பவத்தால் சுரண்டை பேரூந்து நிலையம் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.