Close
பிப்ரவரி 23, 2025 3:10 மணி

குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு  நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பொன்னுசாமி, வேளாண்மை உதவி இயக்குநா் குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் பரணிதரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் தனியார் சூரிய மின்சக்தி நிறுவனம் விவசாயிகளின் நிலத்தில் குறுக்கே 30க்கும் மேற்பட்ட ஏக்கரில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது.

விவசாயிகளின் நிலத்தின் குறுக்கே விவசாயம் நிலத்திற்கு வழியை விடாமல் சோலாா் பேனல்களை நிறுவியுள்ள தனியாா் நிறுவனம், பொதுவழியை ஆக்கிரமித்துள்ளது. மேலும், இதுகுறித்து . பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இதுவரை அந்த நிறுவனம் விவசாயிகளுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை.

அளவீடு பணிகளை  தொடங்கி வைத்துவிட்டு இதுவரை விவசாயிகளுக்கு வழி விடாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. வந்தவாசி வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து முறையாக வழி ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு தரையில் அமா்ந்து  போராட்டம் நடத்தினா்.

அதிகாரிகளுக்கு காது கேட்கும் கருவி

இதைத் தொடா்ந்து, கீழ்வெள்ளியூா், ஆச்சமங்கலம், கீழ்நமண்டி, கூத்தம்பட்டு, வெங்கடாபுரம் ஆகிய கிராமங்களில் மயானத்துக்கு உரிய பாதை வசதி செய்து தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது குறித்து எத்தனை முறை கூட்டத்தில் பேசினாலும் அதிகாரிகள் காட்டும் அலட்சியத்திற்கு அளவே இல்லை என்று சில விவசாயிகள் புகாா் தெரிவித்துப் பேசினா்.

தொடர்ந்து  அதிகாரிகளுக்கு காது கேட்கும் கருவி மற்றும் கருப்பு கண் கண்ணாடிகளை வழங்கி விவசாயிகள் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top