உதாசின் அகாடாவின் தென்னிந்திய தலைமை பீடாதிபதியாக பட்டாபிஷேகம் பெற்று காஞ்சிபுரம் வருகை தந்த மடாதிபதி கர்ஷினி அனுபவானந் அவர்களுக்கு உதாசின் வரவேற்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் , அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது 600 ஆண்டுகால கடமை உதாசின் பாவாஜி மடம்.
இம் மடம் காஞ்சிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு திருவண்ணாமலை, மணிமங்கலம், ராணிப்பேட்டை, ராமேஸ்வரம், மற்றும் திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வேத பாடசாலை மற்றும் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இம்மடத்தில் மடாதிபதியாக சுவாமி கர்ஷினி அனுபவானந் சுவாமி ஜி இருந்து வருகிறார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் உதாசின் அகாடாவின் தென்னிந்திய தலைமை பீடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டார்.
இந்நிகழ்வினை முடித்துவிட்டு காஞ்சிபுரம் வருகை புரிந்த அவருக்கு உதாசின் வரவேற்பு குழு சார்பில் மேள தாளங்கள் முழங்க , பட்டாசுகள் மற்றும் சிறப்பு கும்பம் மரியாதை அளிக்கப்பட்டு, ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உதாசின் மட பக்தர்கள் கூறுகையில் , தென்னிந்திய மடாதிபதியாக பதவியேற்றுள்ள சாமிஜிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது தமிழகம் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பாவாஜி மடங்களில் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் சுவாமிஜி துணையாக இருப்பார் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதாசின் பாவாஜி மட மேலாளர் சுதாஅன்சு முனி, விஸ்வ ஹிந்து பரிஷத் காஞ்சி மாவட்ட நிர்வாகி என்.சிவானந்தம், பாஜக தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.