குருவிமலை நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டிட வகுப்பறையின் மேற்கூரை பூச்சு விழுந்த நிலையில், புனரமைப்பு பணியிலும் சரி இல்லை என கூறிய புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரரை அதிரடியாக மாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவிமலை பகுதியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் ஏற்கனவே இருந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் ரூபாய் 63 லட்சத்தில் கட்டப்பட்டது.
இக்கட்டிடம் கடந்த ஜூலை மாதம் பள்ளி மாணவர்கள் இறை வணக்கத்திற்கு சென்று இருந்த நிலையில், ஒரு வகுப்பறையின் மேல் கூரை பூச்சு மின்விசிறியுடன் பெயர்ந்து மாணவர்களின் இருக்கையின் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக மாணவர்கள் தப்பிய நிலையில், இதுகுறித்து பெற்றோர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிகள் முறையாக நடக்கவில்லை என ஒப்பந்ததாரர் மீது புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் பயில வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.
புனரமைப்பு பணிகளிலும் மிகுந்த முறைகேடுகள் நடைபெறுவதாக நேற்று பெற்றோர்கள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா மற்றும் பொறியாளர் சகுந்தலா ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் பணிகள் முறையாக செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
உடனடியாக ஒப்பந்ததாரரையை மாற்ற வேண்டும் எனவும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரரை மாற்றியும், அதேபோல அதே வளாகத்தில் மற்றொரு கட்டிடம் கட்டி வரும் ஒப்பந்ததாரரிடம் இப் பணிகளை மேற்கொண்டு முறையாக ஒப்படைக்க உத்தரவிட்டார்.
ஏற்கனவே இந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாருக்கு எந்தப் பணிகளும் வழங்க வேண்டாம் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு பரிந்துரை செய்து அவரை பிளாக் லிஸ்டில் வைக்க தெரிவித்துள்ளதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா தெரிவித்தார்.
63 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் இதுபோன்று புனரமைப்பு பணிகளிலேயே செல்லும் நிலையில் மாணவர்கள் தலைமை ஆசிரியராக மற்றும் அங்கன்வாடி மையம் என பல இடங்களில் வகுப்பறைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அவனுக்கு பணம் தரக்கூடாது .ஆனால் அவன்யார்யாருக்கு லஞ்சம் எவ்வளவு கொடுத்தேன் என்று போட்டுக்கொடுப்பான்