இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. டிஜிட்டல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என பிரதமர் மோடி முதல் நாட்டில் உள்ள வங்கித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்படி இருந்தும் மோசடிக்காரர்கள் புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி ஏமாற்றி வருகின்றனர். அதிகாரிகள் என்ன தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மோசடிக்காரர்களின் புதிய யுக்திகளில் பல அதிகாரிகளும் சிக்கி பணத்தை இழந்துள்ளனர் என்பது தான் மிகப்பெரிய வருத்தமான உண்மை.
2022-23 நிதியாண்டில் ரூ. 277.34 கோடி மதிப்பிலான 6,699 டிஜிட்டல் மோசடிகள் இந்தியாவில் நடந்தது. 2023-24 நிதியாண்டில்ரூ. ₹1,457 கோடி மதிப்பிலான 29,082 மோசடிகள் நடந்துள்ளன.
அதாவது ஒரே ஆண்டில் 300 மடங்கு மோசடிகள் இந்தியாவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இந்த மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.