Close
ஏப்ரல் 18, 2025 11:46 காலை

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை ஊராட்சியில் திரௌபதி அம்மன் கோவில் அருகே கல்லாங்குத்து என்ற வருவாய் கணக்கில் இருந்த இடத்தில் 50க்கும் மேற்பட்டோர்  சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர்.

அங்கு குடியிருக்கும் ஏழாவது வார்டு உறுப்பினர் ஜான் தலைமையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலம் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் தங்கள் கொண்டு வந்த மனுவில் உடனடியாக எங்களுக்கு குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top