Close
பிப்ரவரி 22, 2025 7:01 மணி

அண்ணாமலையார் கோயிலில் வருஷாபிஷேகம்

அலங்கார ரூபத்தில் விநாயகர், சந்திரசேகர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 8-ம் ஆண்டு வருஷாபிஷேகம்  நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.

வருஷாபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 6.2.2017 என்று மகா கும்பாபிஷேம் நடைபெற்றது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், கும்பாபிஷேகம் நடந்த திதி நட்சத்திரத்தின் அடிப்படையில், அண்ணாமலையார்  கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.  அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் வருஷாபிஷேகம் செய்தனர். முன்னதாக, மூலவர் மற்றும் அம்மனுக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், மாலை 7.30 மணியளவில் விநாயகர், சந்திரசேகர் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top