திருவண்ணாமலையில் பழம்பெரும் அரசு பள்ளியான தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 54 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி தமிழ் தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் சீனிவாசன் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவிக்கிழமையாசிரியர் சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம், கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் சான்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நந்தினி பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் சண்முகம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சதீஷ்குமார் கலைச்செல்வி,உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் நிறைவில் பள்ளிச் செயலாளர் ஜான் வில்லிங்டன் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.