திருவண்ணாமலையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் முறையில் திருப்பதி காட்பாடி ரயில் சேவைகள் குறிப்பிட்ட தினங்களில் பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு திருப்பதி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 67210) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 67209) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து இரவு 07.10 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரயில் வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் வேலூர் கண்டோன்மென்ட் வரை செல்லும்.
சென்னை கடற்கரை–திருவண்ணாமலை
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6.00 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 66033) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து காலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 66034) வரும் பிப்ரவரி 11, 13, 15 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி –ஜோலார்பேட்டை
காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06417) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06418) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரயில் வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் முந்தைய நிறுத்தமான சேவூர் வரை செல்லும், என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளது