Close
பிப்ரவரி 24, 2025 3:34 காலை

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் : துணை சபாநாயகர் பங்கேற்பு..!

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இராயம்பேட்டை,, வழுதலங்குணம் ஊராட்சி, ஊதிரம்பூண்டி ஊராட்சி, மாதளம்பாடி ஊராட்சி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞரின் வரும் காப்போம் சிறப்பு முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி  ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் தமயங்கி ஏழுமலை , அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி,

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை பின் அளவு சர்க்கரை அளவு மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் கண் புரை கண்டறிதல் மற்றும் இசிஜி எக்ஸ்ரே போன்ற அனைத்து வகையான சிகிச்சைகளும் இந்முகாவின் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இந்த முகாமில் கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு போன்ற அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் தங்களின் உடல்நிலை பாதுகாத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் உயர் சிகிச்சைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது .அதே போல தமிழக அரசின் மூலம் அனைத்து குடும்ப தாரர்களுக்கும் தலா 5 லட்சம் என நிதி ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுங்கள் என துணை சபாநாயகர் பொதுமக்களை  கேட்டுக்கொண்டார்,

இந்த முகாமில் அரசு மருத்துவா்கள் ராஜேஸ்வரி, ரம்யா, சண்முகவேல், ஜோதிலட்சுமி, ரஞ்சித் ஆகியோா், கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு (சா்க்கரை நோய்), காசநோய், இருதய நோய், மகப்பேறு மருத்துவம், பால்வினை நோய்கள், குழந்தைகள் நோய், எலும்பு மூட்டு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு முகாமில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) அருணாச்சலம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு, பள்ளித் தலைமையாசிரியை செண்பகவடிவு, சுகாதார ஆய்வாளா் முருகன், பகுதி சுகாதார செவிலியா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top