திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் இரண்டு நாட்களாக பனைமரத் தொழிலாளர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார்.
பனை வாரிய தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பனை தொழிலாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன் நிகழ்ச்சியாக இன்று மதியம் 2 மணி அளவில் திண்டுக்கல் சேம்பர் காமர்ஸ் காலில் துணை தொழிலாளர்கள் சந்திப்பு அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேனி உழவர் சந்தை அருகே உள்ள வசந்தம் மஹாலில் பனை தொழிலாளர் சந்திப்பு,
வாரிய தலைவர் நாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கழகப் பொருளாளர் கண்ணன் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து வர்த்தக அணி துணை செயலாளர் திண்டுக்கல் மங்கை ராஜா பேரவை மாநில துணைத்தலைவர் தேனி கமலக்கண்ணன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் குரு பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் கண்ணன், பேரவை மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் ஜெயமுருகேஷ்,கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ், மதுரை மாவட்ட தலைவர் சுதாகர், மாவட்ட செயலர் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் நாடார் பேரவை நிர்வாகிகள் பனைத் தொழில் புரியும் குடும்பத்தினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பனை மரத்தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டார். சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக கடற்கரை ஓரங்களில் ஒரே நாளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்பட்டு சாதனை செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், மற்றும் மதுரை மாவட்டத்தில் பனைமரத் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டார். பனைமரத் தொழிலாளர்கள் வைக்கின்ற கோரிக்கைகள் வாரியத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவாக கொடுக்க உள்ளார்.
பனைமரத் தொழிலாளர்கள் மீது ஒரு சில மாவட்டங்களில் காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் பனைத் தொழிலை கைவிடும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது பற்றிய தகவல்களை முதல்வரிடம் எடுத்துக்கூறி பனைமரத்தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.