Close
பிப்ரவரி 23, 2025 2:08 காலை

தமிழக சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் 13ம் தேதி மாநில அளவில் போராட்டம்..!

சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் மணிவண்ணன்.

நாமக்கல்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில், வரும் 13ம் தேதி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநிலத் தலைவர், மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பொது சுகாதரத்துறையில், தமிழகம் முழுவதும், சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் நிரப்பப்படாமல், முழுமையாக 100 சதவீதம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை போர்க்கால அடிப்படையில், தற்போது தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களைக்கொண்டு நிரப்பிட வேண்டும்.

2 துணை சுகாதார நிலையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என 2,715 பணியிடங்கள் உருவாக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனுப்பிய கருத்துருவுக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். 5,000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்கள் ஏற்கனவே இருந்தது போல உருவாக்கிடவும்,

நீண்டகாலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, முதல் கட்டமாக பிப். 13ம் தேதி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top