Close
பிப்ரவரி 22, 2025 6:33 மணி

பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் : அமைச்சர் ஆய்வு..!

ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு,

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நினைக்க முக்தி தரும் இத்திருக்கோயிலில் தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலை ஒரு ஆன்மீக நகரமாகும் இங்கு உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் சாமி தரிசனம் செய்வதற்கு வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கும் புகழ் பெற்ற ஆசிரமங்களுக்கும் கிரிவலம் செல்வதற்கும் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டே இருக்கின்றனர். அதனால், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, வெளியூர் வாகனங்களால் திருவண்ணாமலை மாடவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன.

எனவே, அவ்வாறு வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கும், பக்கர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும் அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், வட ஒத்தவாடை தெரு உள்ளிட்ட பகுதிகளில்   பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆய்வு செய்தார்.

உள்ளூா் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்ல தேவையான சிறப்பு ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டார்.

திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கும் முக்கிய இடங்களில் மட்டும் தடுப்புகள் வைப்பதற்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், மேயா் நிா்மலா வேல்மாறன், அருணாசலேஸ்வரா் கோயில் அறங்காலவா் குழுத் தலைவா் ஜீவானந்தம், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஸ்ரீதரன், வட்டாட்சியா் துரைராஜ் , துணை மேயர் ராஜாங்கம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top