நாமக்கல் :
மோகனூர் அறிவு சார் மையத்திற்கு 2 கம்ப்யூட்டர்களை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், வாங்கல் பிரிவு அருகில் தமிழக அரசின் சார்பில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு பல்வேறு தேர்வுகளுக்கு படிப்பதற்காக வருகை தரும், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 1.76 லட்சம் மதிப்பில் 2 கம்ப்யூட்டர்கள் வழங்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாதேஸ்வரன் எம்.பி., கலந்துகொண்டு புதிய கம்ப்யூட்டர்களை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
மாணவ, மாணவியர் நலனுக்காகவும், அரசு வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில், கிராமப்புற மாணவ, மாணவியர் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிவு சார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக, நவீன கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது அவற்றை, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், செயல் அலுவலர் கலைராணி, அட்மா தலைவர் நவலடி, கவுன்சிலர் செல்லவேல், கொ.ம.தே.க., மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.