திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரில் வரும் 14ஆம் தேதி முதல் தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை ஈசான மைதானத்தில் 100 புத்தக கடைகளுடன் கூடிய புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன இந்த புத்தகத் திருவிழாவினை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வரும் 14ஆம் தேதி அன்று மாலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை உரையாற்ற உள்ளார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கு உள்ளனர்.
இந்த புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுகள் உணவு கூடங்கள் அரசு துறை அரங்குகள் என தினமும் காலை 10 மணி முதல் இரவு வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% கழிவும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத் திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, மாவட்ட மைய நூலகர் மற்றும் அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.