Close
பிப்ரவரி 23, 2025 4:09 மணி

புதிய துணை சுகாதார நிலைய பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்..!

பூமி பூஜை செய்து பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி மேக்களூரில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேக்களூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 15 வது நிதி குழு மாநிலத்தில் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் புதிதாக கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணி தொடங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு துணை சுகாதார நிலையம் புதியதாக கட்டும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேசவன் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, மேலவை பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சுகாதார ஆய்வாளா் முருகன், பகுதி சுகாதார செவிலியா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இராயம்பேட்டை,, வழுதலங்குணம் ஊராட்சி, ஊதிரம்பூண்டி ஊராட்சி, மாதளம்பாடி ஊராட்சி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞரின் வரும் காப்போம் சிறப்பு முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top