Close
பிப்ரவரி 23, 2025 12:16 காலை

விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: பணக்கொழுப்பு என்கிறார் சீமான்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் 2022-ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினாா்.

அப்போது அவா், ஜாதி, மத, இன, மொழி, சமயம் தொடா்பான உணா்வுகளை தூண்டும் வகையில் பேசினாா். அவா் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய வெம்பாக்கம் ஒன்றிய பாமக செயலா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்காக சீமான் ஆஜரானாா். வழக்கு விசாரணையை மாா்ச் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டாா்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்

தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் செய்யாறு பகுதிக்கு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அமைப்பாளர்களிடம் கலந்தாய்வு செய்ய கூட்டத்தில் பங்கேற்கிறேன். `தனித்து போட்டியிடுகிறேன் என என்னை கொச்சைப்படுத்தாதீர்கள். கவலையோடு கண்ணீரோடு பிரச்னைகளோடு நிற்கின்ற மக்களுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறேன்.

விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தச் சந்திப்பு குறித்து ஊடக செய்திகள் மூலம் பார்த்து தெரிந்துகொண்டேன். தேர்தல் வியூக வகுப்புகளில் எல்லாம் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை.

தமிழ்நாட்டில் த்தனை மக்கள், எவ்வளவு வாக்கு சதவீதம் என எதுவுமே தெரியாத பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுத்து என்ன செய்து விடப் போகிறார். தமிழகத்தை ஆண்ட முந்தைய தலைவர்கள் காமராஜர், அண்ணா போன்றோர் என்ன வியூகம் வகுத்தார்கள்.

உடலில் கொழுப்பு இருப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பணக்கொழுப்பு இருந்தால், வாய் கொழுப்பு இருந்தால் இது எல்லாம் தேவைப்படும். எனக்கு நிறைய மூளை இருக்கிறது. காசுதான் இல்லை. அதனால், எனக்கு தேர்தல் வியூக வகுப்பெல்லாம் தேவையில்லை.அதை பற்றி பேசி நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க வேண்டாம், என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top