ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பாதுகாப்பு, போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு, குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் காவலன் செயலி உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி கலந்து கொண்டு மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
இதில், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி மற்றும் பெண் காவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். மேலும், போக்ஸோ சட்டம் குறித்து கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு டிஎஸ்பி பரிசுகளை வழங்கினாா்.
அரசுப் பள்ளியில் நாட்டு நல பண்ணிக்கிட்டு முகாம் நிறைவு விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தாழம்பள்ளம் கிராமத்திலும் சலுகை கிராமத்திலும் கடந்த ஆறாம் தேதி முதல் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது.
நாட்டு நல பண்ணிக்கிட்ட நிறைவு விழா 13 ஆம் தேதி மாலை சலுகை கிராமத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் ரமணன், செயலாளர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பாரதி அனைவரையும் வரவேற்றார். விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட அவர் நாட்டு நலப் பணி திட்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், சாரண சாரணியர் இயக்க அலுவலர்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.