திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் முதல் நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு சுற்றுச்சூழல், பல்வேறு திட்ட பணிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சந்தை மேடு பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுதல், நெடுங்காம் பூண்டி ஊராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ,கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சியில் மயான பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல், பேரூராட்சி குளக்கரை சீரமைத்து நடைபாதை அமைத்தல், ஆகிய பணிகள் மேற்கொள்வதற்கான நிகழ்ச்சிகளில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் வகையில் இரண்டு பேட்டரி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்சிகளில் வேலூர் மண்டல பேரூராட்சிகள் துணை இயக்குனர் ஞானசுந்தரம், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் ,பேரூராட்சி தலைவர் சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழரசி, உதவியாளர் வெற்றிவேல், அரசு ஒப்பந்தகாரர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.