Close
பிப்ரவரி 22, 2025 11:53 மணி

கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு 50 வகையான விளையாட்டு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் விழாவிற்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கு.பிச்சாண்டி கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கேரம், வாலிபால், கிரிக்கெட், பேட்மிண்டன் என்பன உட்பட 50 வகையான விளையாட்டு பொருட்களை வழங்கியும் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் உ ள்ள கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வகையில் தமிழக அரசு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற விளையாட்டு உபகரணங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டு சிறந்த விளையாட்டு வீரர்களாக திகழ வேண்டும் என உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என்றார்.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நித்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவக்குமார், குப்புசாமி, ஜபார், விஜயா சேகர், தண்டபாணி , பரசுராமன் மற்றும் சதீஷ், இளம்பரிதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top