ஆரணி பேரூராட்சியில் சரிவர கணக்கு காட்டப்படுவது இல்லை என கூறி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு. வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என திமுக, அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் அவசர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி மன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க திமுக, அதிமுக கவுன்சிலர்கள் அரங்கிற்கு வந்தனர்.
அப்போது பேரூராட்சியில் முறைகேடுகள் நடப்பதாகவும் வரவு, செலவு கணக்குகள் முறையாக சமர்ப்பிப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டி கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
பேரூராட்சி நிர்வாகம் கூட்டத்தில் முறையாக வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பிக்காமல் மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள் பேரூராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டு கொண்டனர்.
மேலும் சில கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வராத நிலையில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் அவசர கூட்டம் நடத்தப்படாமலே கைவிடப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் புறக்கணித்த சம்பவம் காரணமாக பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.