சாலவாக்கம் அடுத்த மாம்புதூர் ஏரி வரத்து கால்வாய்களை அரசு விதிகளை மீறி மூடி கல்குவாரிக்கான பாதை அமைத்தை கண்டித்து அப்பகுதி கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் வரத்து கால்வாயை ஏற்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
உத்திரமேரூர் வட்டத்துக்கு உட்பட்டது மாம்புதூர் கிராமம். இங்குள்ள சித்தேரியில் நீர் சேமிப்பை கொண்டு சுமார் 200 ஏக்கர் விலை நிலங்கள் பயிர் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்பகுதியில் சென்னையைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான விலை நிலத்தில் கல்குவாரி அமைக்க கனிமவளத்துறைக்கு விண்ணப்பித்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதிக்கு செல்ல உரிய வழி இல்லாத நிலையில் அங்குள்ள சமூக காடுகள் மற்றும் ஏரி நீர் தாங்கல், கலங்கள் உள்ளிட்டவைகளில் செல்லும் பாதைகளில் மறித்து பாதை அமைக்கும் பணியை கல்குவாரி உரிமையாளர் மேற்கொண்டு வந்தார்.
இது மட்டுமில்லாமல் விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாயும் மூடி பாதையை ஏற்படுத்திக் கொண்டதால் அப்பகுதி மக்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் மனு தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது குறித்து உரிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் வழங்கியது.
மேலும் நீதிமன்றம் கூறிய அறிவுரையின்படி ஆய்வு மேற்கண்ட மாவட்ட நிர்வாகம் உரிய சொந்த வழி இருந்தால் மட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு சமூககாடுகள் மற்றும் நீர்நிலைகளை அழித்து மேற்கொள்ளக் கூடாது என வரத்து கால்வாய் மீண்டும் ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து இருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து இதுகுறித்து கல்குவாரி உரிமையாளர் மேல்முறையீடு நீதிமன்றத்தில் தொடர்ந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் நீர் வரத்து கால்வாயை மூடி சமூக காடு பகுதிகளில் வாகனங்கள் செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தி வந்தார்.
இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று மீண்டும் அப்பகுதிக்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் மற்றும் ஆட்சியர் தெரிவித்த தகவல்குறித்து அறிவுரையாக தெரிவித்து அவர்களை வெளியேற்றி அங்கு பணியில் இருந்த ஜேசிபி மூலம் மீண்டும் நீர்வரத்து கால்வாயை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து அரசு விதிமுறைகளை மீறி மீண்டும் பணியை தொடர்ந்தற்கு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து பகுதி விவசாயிகள் கேள்விகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுகுறித்து புகார் தெரிவித்தும் முறையான நடவடிக்கைகள் நீதிமன்ற அறிவுரைக்கு பின்னும் அவர் பின்பற்றாதால் வரும் காலங்களில் இது செயல் முன்னுதாரணமாக அமையும் என தெரிவித்தார்.