தென்காசியில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 40 பேர் கொண்ட குழுவினர் காசிக்கு புனித யாத்திரை சென்றுள்ளனர்
இவர்களின் 10 பேர் தென்காசி பகுதியில் சேர்ந்தவர்கள். கடந்த 13ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற இவர்கள் பதினெட்டாம் தேதி காசியில் இருந்து அயோத்தி சென்றுள்ளனர். அயோத்தியில் இருந்த பொழுது ராமலட்சுமி மற்றும் கஸ்தூரி ஆகிய இரண்டு பெண்களை காணவில்லை என்பது தெரிய வந்தது
இது தொடர்பாக காசியில் உள்ள காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது
உறவினர்கள் காசிக்கு காணாமல் போன இரண்டு பெண்களையும் தேடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகள் காத்திருக்கின்றன.