திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டனர் காவலர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 11 மணிக்கு மேல் அந்த அலுவலகத்தில் தரைத்தனத்தில் திடீரென தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதைக் கவனித்த இரவுக் காவலா் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா்.
தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள் ,ஏசி , போன்ற பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.
சேதமான பொருட்களின் மதிப்பு ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். இதில், யு.பி.எஸ். சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தால் நகரின் சில பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது.
