Close
பிப்ரவரி 21, 2025 10:09 மணி

பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை: தொடங்கி வைத்த எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் ஊராட்சியில் ரூ 88.25 லட்சத்தில் புதிய 4 வகுப்பறை மற்றும் ஒருஆய்வகம் ஆகிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

வீரளூர் பகுதிக்கு நான் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தபோது என்னிடம் அப்பகுதி மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலினிடமும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் நான் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் வீரளூர் ஊராட்சிக்கு புதிய 4 வகுப்பறை பள்ளி கட்டிடமும் ஒரு ஆய்வக கட்டிடமும் அமைப்பதற்கு வலியுறுத்தி வந்தேன். அதன் பேரில் இப்போது ரூ 88.25 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடம் அமைப்பதற்கு இப்போது பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பணிகள் விரைந்து முடித்து வரும் ஆண்டில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதன் பின்னர் இந்த பள்ளியில் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஆய்வகத்தில் செய்முறை செயல்களை செய்து கல்வியில் சிறந்த முறையில் சாதிக்கலாம்.

மாணவர்கள் நீங்கள் சிறந்த முறையில் படித்து சாதிப்பதற்கு என்ன உதவி வேண்டும் எனறாலும் என்னிடம் தாராளமாக கேளுங்கள் உங்களுக்கு செய்வதற்கு என்றும் நான் தயாராக உள்ளேன் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, நகர செயலாளர் சௌந்தர்ராஜன், முன்னாள் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, அரசு ஒப்பந்ததாரர் தங்கமணி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top