திருவண்ணாமலையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய சிறப்புப் பதிவு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொழிலாளா் நலவாரியத்தின் மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தின் கண்காணிப்பாளா் வி.முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய சிறப்பு பதிவு முகாமை நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் தொடங்கிவைத்துப் பேசுகையில்.
தமிழ்நாடு முதலமைச்சர் 4 மணிநேரம் தூங்கி 20 மணிநேரம் மக்களுக்காக பணியாற்றி வருகிறார் . குறிப்பாக தொழிலாளர்கள் நலனில் அரசு கொடுக்கும் பணத்தை சரியாக கொண்டு சேர்க்கும் பணியினை சிறப்பாக செய்து வருகிறார். அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்திலும் மற்றும் தமிழகம் முழுவதிலும் அரசு திட்டங்களையும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச்செல்லும் பணி தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதேபோல் இம்மாவட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நேரடியாக மக்களிடையே சென்று விழிப்புணர்வும் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் தொழிலாளர்களுக்கு காலி வீட்டுமனைக்கு ரூ.4 லட்சம் மானியமும், விபத்தில் இறந்தால் ரூ.2 லட்சமும் ,விபத்து ஊனம் பெற்றால் ரூ.1 லட்சமும், கட்டுமான தொழிலாளர்கள் பணியின்போது இறந்தால் தொகையும் அவர்கள் குழந்தைகள் படிப்பு செலவுக்கு மாதந்தோறும் தொகையும் அரசு வழங்கும் சலுகைகளை கொண்டு செல்ல இத்தகைய சிறப்பு முகாம்கள் உதவியாக உள்ளது. தொழிலாளர்கள் இத்தகைய சிறப்பு முகாம்களிள் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர் பேசினார்,
முகாமில், வழக்குரைஞா் சக்திமுருகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா், பரணி, ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்த சிறப்பு முகாமில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு பதிவு செய்து பயனடைந்தனர்.