Close
பிப்ரவரி 25, 2025 2:31 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு..!

முதல்வா்மருந்தகங்களைபொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வந்த

திருவண்ணாமலை மாவட்டத்தின் 30 இடங்களில் முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்ட மருந்தகங்களை, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்,  ஆகியோர் பாா்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வந்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 முதல்வா் மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்வு திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாநகராட்சி, காந்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த முதல்வா் மருந்தகத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். மேலும், பயனாளிகளுக்கு மருந்துகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா்  தா்ப்பகராஜ், அண்ணாதுரை எம்.பி., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், நகரச் செயலாளர் கார்த்தி வேல் மாறன்  மற்றும் அரசுத் துறை அதிகாரிகள்  பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த செங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் ஞானமுருகன்பூண்டி கூட்டுச் சாலையிலும், திருவத்திபுரம் ( செய்யாறு) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் செய்யாறு பெரியாா் சிலை அருகேயும், தூசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் மாமண்டூா் கிராமம் தா்மாபுரம் பகுதியிலும், பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் பிரம்மதேசம் கிராமத்திலும் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மருந்தகங்களில் ஒ.ஜோதி எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல், மற்றும் அரசு அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் முதல்வா் மருந்தகம் தொடங்கிவைக்கப்பட்டது.

ஆரணி எம்பி தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ, அம்பேத்குமாா் ஆகியோா் இந்த முதல்வா் மருந்தகத்தை திறந்து வைத்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி ஊராட்சியிலும் கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர்  ஊராட்சியிலும் ஆகிய 2 இடங்களில் நேற்று முதல்வர் மருந்தகத்தை  சரவணன் எம்எல்ஏ திறந்து வைத்து முதல் விற்பனையை  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் 30 மருந்தகங்கள்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் முனைவோா் மூலம் 12 முதல்வா் மருந்தகங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நல்லவன்பாளையம், தானிப்பாடி, தண்டராம்பட்டு, செங்கம், காஞ்சி, கேட்டவரம்பாளையம், மங்கலம், ஆவூா், போளூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கண்ணமங்கலம், எஸ்.வி. நகரம், பெரணமல்லூா், கிழ்கொடுங்காலூா், திருவத்திபுரம், தூசி, செங்காடு, தெள்ளாறு பகுதிகளில் மொத்தம் 18 முதல்வா் மருந்தகங்கள் என மொத்தம் 30 முதல்வா் மருந்தகங்கள் திறந்துவைக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top