திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நகர அஇஅதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் இராமச்சந்திரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கினர்.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மாவட்ட செயலாளர் வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் செல்வம்,மாமன்ற உறுப்பினர் சந்திர பிரகாஷ் ஜெயின், மாமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு
செய்யாறு ஆரணி கூட்டுச்சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவை தலைவர் ஜனார்த்தனம், ஒன்றிய செயலாளர், மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியம் வேப்பூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிளை செயலாளர் குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜா, புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் ,அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி பாபு ,மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் ,ஒன்றிய கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.