Close
பிப்ரவரி 26, 2025 3:10 காலை

இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியன் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தியை திணித்து மொழிப்போருக்கு நிர்ப்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மாணவர் இயக்கங்களில் கூட்டமைப்பு சார்பில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாணவர் அணி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு முன்பாக ரயில்வே சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திஅதன்பின் ஊர்வலமாக காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக சென்றனர்.

இன்று ரயில்வே காலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் கல்வியைத் திறக்கும் பாஜக அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஒருபோதும் தமிழகத்தின் மும்மொழிக் கொள்கை செயல்படுத்த விடமாட்டோம் என கூட்டமைப்பு சார்பில் கோஷங்கள் மற்றும் விளக்க உரை நடைபெற்றது.

300க்கும் மேற்பட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் திமுக மாணவரணியினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திமுக மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ராம் பிரசாத், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top