Close
மார்ச் 4, 2025 3:18 காலை

பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து புரட்சி பாரத கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட புரட்சி பாரத கட்சியின் மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமையில், காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே கண்டன மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தொடர்ந்து பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும் ஆணவ படுகொலைக்கென தனி சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி, புரட்சி பாரதம் கட்சி சார்பில் இன்று தமிழக முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் வழக்கறிஞர் பாரதிதாசன் கலந்து கொண்டார்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தினம் தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆவண படுகொலை, பாலியல் சீண்டல், கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை என தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் உள்ளதாகவும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் மற்றும் பல்வேறு தாக்குதல் நிலையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை எனவும், இளைஞர்களை சீரழிப்பதை நோக்கமாக செயல்படுவதாகும் கூறப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பரணிமாரி, காஞ்சிபுரம் மாநகர செயலாளர் குட்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் தீனா, தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தரணி, காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் பவளஅரசன் , தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top